Archive for the ‘Yuvan Yuvathi Movie Review’ Category

யுவன் யுவதி

இண்டர்நெட் சாட்டிங்கில் சிக்கிய காதலனை கரம்பிடிக்க அமெரிக்க கிளம்பும் யுவதி – ரீமா கல்லிங்கல் (இப்பட அறிமுக நாயகியின் ஒரிஜனல் பெயர்தாங்க…)லுக்கும், உசிலம்பட்டி தாதா அப்பாவின் உடான்ஸ் பொறுக்க முடியாமல், அமெரிக்காவுக்கு எஸ் ஆக விசாவிற்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டு காத்திருக்கும் யுவன் – பரத்துக்குமிடையே ஏற்படும் நட்பு – காதல் – ஊடல் – இத்யாதி, இத்யாதி தான், “யுவன் யுவதி” படத்தின் மொத்தமும்!

உசிலம்பட்டியில் பிறந்தாலும், சென்னை டைட்டல் பார்க்கில் செட்டிலான யுவனாக பரத், பாத்திரத்திற்கேற்ற பளிச்(தேர்வு)! அப்பா சம்பத்தின் அன்பு தொல்லைகளுக்கு பயந்து அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆக அவர் பண்ணும் முயற்சிகளை, ஊரில் இருந்தபடியே தன் செல்வாக்கால் தடுக்கும் அப்பா சம்பத்தும் நச்! இந்த இருவரிடமும் மாட்டிக்கொண்டு காமெடி சந்தானம், படும்பாடு தான் “யுவன் யுவதி” படத்தின் ஹைலைட் டச்! பரத் வழக்கம் போலவே டான்ஸ, ஃபைட் என்று அல்ட்ராமார்டன் யுவனாக பட்டையை கிளப்பி இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக சந்தானமும் காமெடி, காமநெடி என்று வழக்கம் போலவே கலக்கி இருக்கிறார். புதுமுகம் ரீமா கல்லிங்கலின் நடிப்பில், அலட்டல், காதல், மிரட்டல் எல்லாம் ஒரு சேர புதைந்து கிடக்கிறது. தமிழுக்கு ஏற்ற சரியான முகம்தான் அம்மணி ரீமாவுக்கு! உசிலம்பட்டி மிராசாக மிரட்டியிருக்கிறார் சம்பத்! சபாஷ்!!

அதெப்படி அமெரிக்காவுக்கு விசா கிடைக்காதவர்களுக்கெல்லாம், சீஷெல்ஸ் தீவிற்கு விசா கொடுத்து விடுவார்களா என்ன…?, சென்னை சிட்டிக்குள் ஏ.சி., டி.சி., ஆஃபிஸ் தான் உண்டு என்பதை மறந்து, எஸ்.பி., ஆஃபிஸ் வரை போய் வருகிறேன் மாப்பிளை என்று பரத்திடம் இன்ஸ் மாமா சொல்வது எப்படி….? என்பது உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்களுக்கும், இன்னும் பல வினாக்களுக்கும் கதாசிரியரும், வசனகர்த்தாவுமான எஸ்.ராமகிருஷ்ணன் தான் பதில் சொல்ல வேண்டும்!

கோபி ஜெகதீஸ்வரனின் நெஞ்சை அள்ளும் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் பிரமாண்டமான பின்னணி இசையும் (பாடல்கள் இசை அல்ல…), இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலின் இயக்கத்தில், “யுவன் யுவதி”யை இளமையாகவும், இனிமையாகவும் காட்டியுள்ளனர். ஆனாலும் “யுவன் யுவதி” டைட்டிலில் இருக்கும் இ‌ளமையும், இனிமையும் படத்தில் இன்னும் சற்றே கூடுதலாக இருந்திருக்கலாம்!!.

மொத்தத்தில் “யுவன் யுவதி”, ரசிகர்கள் கொடுக்கும் காசுக்கு “பலன் பாதி!”