வெப்பம்
Posted in Veppam Moview Review, latest tamil movie, tamil film review on 08/08/2011 06:34 pm by admin
பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின், பெண் உதவியாளர் அஞ்சனா இயக்கத்தில், கவுதமின், ஃபோட்டான் கதாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம்தான் “வெப்பம்”.
வழக்கமான அன்டர் கிரவுண்ட் தாதாக்களின் கதைதான். அதில்
ஒரு அப்பா-பிள்ளைகளின் மோதலையும், அண்ணன்-தம்பி பாசத்தையும், நல்ல நட்பையும், நம்பும் படியான காதலையும் திணித்து, திகட்ட திகட்ட தித்திக்கும் திரைப்படத்தை தர முயன்று, அதில் பாதி வெற்றியையும் பெற்றிருக்கிறார் பெண் இயக்குநர் அஞ்சனா.
புதுமுகம் நானி, கார்த்திக்குமார், முத்துக்குமார், நித்யா மேனன், பிந்து மாதவி, ஜெனிபர் என்று எக்கச்சக்க புதுமுகங்களும், பழகிய முகங்களும் வரிசைகட்டி நடித்திருந்தாலும் நானி, கார்த்திக், நித்யா மேனன், பிந்து
மாதவி ஜோடிகள் தான், நம் கண்ணையும், கருத்தையும் கவருகின்றனர். ஆனால் அவர்களும் குப்பத்து இளைஞர்கள் பாத்திரங்களில் ஒட்டாமல், மேல் தட்டு யுவன்-யுவதிகளாய் ஜொலிப்பது பரிதாபம். பின்னணி இசையிலும் சரி, பாடல்கள் இசையிலும் சரி, இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் பின்னி
பெடலெடுத்திருக்கிறார். ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவும் பளிச்!
பெண்தாதா, போதை மருந்து கடத்தல், பாலியல் தொழில், காதல் என்று கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் அஞ்சனா மாதிரி பெண் இயக்குநர்களும், அரைத்தமாவையே டிஃபிரண்ட் என்ற பெயரில் அரைப்பது வேதனை. மற்றபடி “வெப்பம்” – “தகிக்கவுமில்லை!” “ரசிகர்களை தவிப்பில் விடவுமில்லை!!”






