உதயன்
Posted in Udhayan Movie Review, latest tamil movie, tamil film review on 07/11/2011 12:40 pm by admin
“வம்சம்” படத்தில் அறிமுகமான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி, கமர்ஷியலாக காலடி எடுத்து வைத்துள்ள 2வது படம்தான் “உதயன்”. 2வது படத்திலேயே இரட்டை வேடம் ஏற்றிருக்கும் அருள்நிதிக்கு மொரம்பவே துணிச்சல் தான்!
கதைப்படி அராஜகப்பேர்வழியான அப்பா மாதிரி ஒரு அருள்நிதி பெரியதாதா. அவரது தம்பியான மற்றொரு அருள்நிதி அப்படியே அப்பாவுக்கும், அவருக்கும் ஆப்போசிட்டான சாது! மூத்த அருள்நிதி தனது மூர்க்கத்தனத்தால், வில்லன் கோஷ்டியிடம் சிக்கி சின்னாபின்னமாக, தனது தம்பியின் மடியில் மூச்சை விட, இதைகண்டு தம்பி அருள்நிதி, தாதாயிசத்தில் குதித்து, அப்பா, அண்ணன் வழியில் ஜெயித்தாரா…? அல்லது தனது அகிம்சை வழியில் அப்பாவையும் திருத்தி வில்லனையும் விரட்டி, ஆசைக்காதலியுடன் வாழ்ந்தாரா…? என்பது “உதயன்” படத்தின்
வித்யாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
அண்ணன்-தம்பியாக டூயல் ரோலில் அள்நிதி நன்றாகவே நடித்திருக்கிறார். அவருக்கு சப்போர்ட்டாக சந்தானம் வழக்கம் போலவே தன் டபுள் மீனிங் காமெடியில் கலக்கி இருக்கிறார். புதுமுக நாயகிகள் இருவரும் டபுள் ஓ.கே., மணிகாந்த் கத்ரியின் இசையும், எஸ்.டி.விஜய் மில்டனின் ஒளிப்பதிவும்,
புதியவர் சாப்ளினின் இயக்கத்திற்கும், எழுத்திற்கும் உறுதுணையாக இருந்து “உதயன்” படத்தை உயர்த்தி பிடித்திருக்கின்றன.
மொத்தத்தில் “உதயன்”, “ஓ.கே.தான்!” “ஓஹோ தான்!!”






