சிங்கம் புலி
Posted in Singam Puli Movie Review, latest tamil movie, tamil film review on 03/11/2011 02:51 am by admin
தமிழ்சினிமாவில் மற்றுமொரு இரட்டையர்கள் சப்ஜெக்ட்! ஆனால் அது மற்றுமொரு எனும் அளவில் இல்லாது, மட்டற்றது எனும் அளவில் ஆச்சர்யப்படுத்தி இருப்பதுதான் “சிங்கம் புலி” யின் சிறப்பு! ஒரே குடும்பத்தில் பிறந்த இரட்டை ஜீவாக்களில் ஒருத்தர் அப்பா நம்பும் அடப்பாவி கேரக்டர்! மற்றும் ஒருத்தர் அப்பாவை நம்பும் அப்பாவி கேரக்டர்! ஆனால் அப்பாவிற்கும், உறவிற்கும், ஊருக்கும் அடப்பாவி அப்பாவியாகவும், அப்பாவி அடப்பாவியாகவும் தெரிவதுதான் படத்தின் பலம். பலவீனம் எல்லாம்!!!
கதைப்படி பொன்வண்ணன், குயிலி தம்பதியினரின் இரட்டை வாரிசுகள் சிவாவும், அசோக்கும். சிவா மீன் மார்கெட்டில் தொழிலாளி. அசோக் பெரிய வழக்கறிஞர். சிவா மீன் வெட்டுபவர் என்றாலும் தான் உண்டு, தன் காதலி ஸ்வேதா உண்டென்று வாழ்பவர். ஆனால் அவரது தம்பி அசோக் வக்கீல் என்றாலும் பெரிய பெண்பித்தர். தான் திருப்தியாக வாழ யாருடைய நிம்மதியையும் குலைக்க கூடியவர். அப்படி அசோக்கால் பாதிப்பிற்
குள்ளான ஒரு பெண் பிணமாகிறார். அவருக்காக தம்பி என்றும் பாராமல் வக்கீல் அசோக்கை போலீஸில் படித்து கொடுக்கிறார் அண்ணன் மீன்வெட்டி சிவா. தான் வாதாடபோகும் கோர்ட்டிலேயே தன்னை குற்றவாளியாக நிறுத்தும் அண்ணணை பழிவாங்க புறப்படுகிறார் தம்பி! ஜெயித்தது அண்ணனா? தம்பியா? நீதியா? அநீதியா? என்பதுதான் “சிங்கம் புலி” படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
மீன் மார்கெட் தொழிலாளி சிவாவாகவும், வக்கீல் அசோக்காகவும், ஜீவா இரட்டை வேடங்களில் சும்மா பியித்து உதறி இருக்கிறார் என்றே சொல்லலாம். அண்ணன் ஜீவாவுக்கு தம்பி மீது கோபமும், பாசமும் ஒருங்கே பொங்கும் காட்சிகளில் இந்த ஜீவா அள்ளுகிறார் என்றால், கட்டுணா இவளைத்தான் கட்டணும்… என பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கையில் தள்ளும் அந்த ஜீவா பேசும் பஞ்ச் டயலாக்குகளில் தியேட்டரே துள்ளுகிறது. சொந்த அண்ணனிடமே உள்ளுக்குள் விஷமத்தையம், வில்லத்தனத்தையம் வைத்துக்கொண்டு வெளியில் இனிக்க இனிக்க பேசு
ம் பாத்திரத்தில் ஜீவா ரொம்பவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
நல்ல ஜீவாவின் காதலி ஸ்வேதாவாக திவ்யா ஸ்பந்தனாஸ், கெட்ட ஜீவாவின் காதலி காயத்ரியாக புதுமுகம் செளந்தர்யா. இருவரில் திவ்யாவிற்கே நடிக்க அதிக வாய்ப்பு, ஆனால் காதல், கர்ப்பம், தற்கொலை, என தன் பக்கமும் ரசிகர்களை திருப்பி, திருப்திபட்டு கொள்கிறார் புதுமுகம் செளந்தர்யாவும். பொன்வண்ணன், பாண்டு, குயிலி, மாணிக்கவிநாயகம் உள்ளிட்டவர்களும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். விதவிதமான கெட்-அப்களில் வரும் சந்தானம் ட
புள் மீனிங்கில் சிரிக்க வைப்பதுடன் சிலிர்க்கவும் வைக்கிறார்.
மணிசர்மாவின் இசை சிங்கமாக உருமுகிறது என்றால், பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு புலியாக பளீரென்று பாய்கிறது. படத்தின் பெரிய பலம் ஜீவாவின் டூயல் ரோல் மாதிரியே இவை இரண்டும் என்றால் மிகையல்ல!
சின்ன வயதிலேயே காணாமல் போகும் அண்ணன், வயசான காலத்தில் கிடைக்
கும் தம்பி என பழைய காலபாணியில் இரட்டையர் கதையை கையாளாமல் ஒரே வீட்டில் எதிரும், புதிருமான இரட்டை பிறவிகளை வைத்து புதுசாக கதை பண்ணியிருக்கும் ஒரு காரணத்திற்காகவே எழுதி, இயக்கி இருக்கும் புதியவர் சாய்ரமணியை பாராட்டலாம். “பேராண்மை” இயக்குநர் எஸ்.பி.ஜெகநாதனின் உதவியாளராம் இவர். எந்த சீனிலும் அது தெரியாதது சாய்ரமணியின் பலம்! நீண்டு கொண்டே போகும் படத்தின் நீளம் பலவீனம்!!
கூட்டி கழித்து பார்த்தால் “சிங்கம் புலி” காம(நெ)டி! “கலக்ஷன்வெடி!!”






