சபாஷ் சரியான போட்டி
Posted in Sabaash Sariaana Potti Movie Review, latest tamil movie, tamil film review on 06/07/2011 06:26 am by admin
சினிமா ஹீரோவை நிஜத்திலும் ஹீரோவாக நம்பும் இளைஞர்களுக்கு புத்தி சொல்வது போல் சொல்லி, க்ளைமாக்ஸில் அந்த ஹீரோவையும் நல்லவராக காட்ட முற்பட்டிருக்கும் நம்பமுடியாத படம்!
அரசியல் ஆசையில் தன் ஒவ்வொரு அடியையையும் எடுத்து வைக்கும் ஹீரோ ஜெயராமுக்கும், அவரை கடவுளாக கருதும் ஞானகுரு எனும் கிராமத்து ரசிகன் ஸ்ரீராம்கார்த்திக்குக்குமிடையில் ஏற்படும் புரிதலும், புரியாததலும் தான் “சபாஷ் சரியா போட்டி” மொத்தபடமும்.
அரசியல் ஆசையில் அசிங்கம் பண்ணும் நம்மூர் ஹீரோக்களை ஜெயராம் கேரக்டர் கிண்டல் செய்திருக்கும் ஆரம்பகாட்சிகள் சூப்பர் என்றால், அதன்பின் வரும் டி.வி.டேலண்ட் ஷோ காட்சிகளும் அதில் ஹீரோ ஜெயராமின் பங்களிப்பும் சுத்த போர்! ரொம்பவும் சுமார்!!
புதியவர் ஸ்ரீராம் கார்த்திக் – ஞானகுரு பாத்திரத்தில் புதுமுகம் எனும்
அளவையும் தாண்டி பளிச்சிட்டிருக்கிறார். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் இப்படத்தின் இயக்குநர், நடிகர் வேணு அரவிந்த், டபுள் ஆக்டிங்கில் டார்ச்சர் செய்திருப்பதைவிடுத்து கதையிலும், இயக்கத்திலும் இன்னும் சற்றே கவனம் செலுத்தியிருந்தால் படம் தப்பித்திருக்கும்!
மொத்தத்தில் “சபாஷ் சரியான போட்டி” – “தியேட்டரில் டி.வி.ரியாலிட்டி ஷோ!”






