ரா ரா
Posted in Raa Raa Movie Review, latest tamil movie, tamil film review on 10/30/2011 02:40 pm by admin
ஹீரோ உதயாவிற்கு தமிழ்சினிமாவில் ஓர் உயரமான இடம் கிடைக்க உதவியிருக்கும் தரமான காமெடிப்படம் தான் “ரா ரா”!
மீனவ குப்பத்து பெண்ணுக்கும், ஆச்சாரமான அக்ரஹாரத்து வாலிபனுக்கும் இடையே காதல். தன் காதல் நிறைவேற, காதலி குடும்பம் மொத்தத்தையும் பிராமின் வேஷம் போட வைக்கிறார் காதலர். தங்கையின் காதலுக்காக அவரது தாதா அண்ணனும், மொத்த குடும்பத்துடன் மயிலாப்பூர் அக்ரஹாரத்தில் வீடு பார்த்து குடியேறி பிராமின் பாஷை பேச, இருவரது காதல் கைகூடியதா…? இல்லையா…? என்பது க்ளைமாக்ஸ்! ஒரு காதல்கதையை முழுநீள காமெடி கதையாக சொல்லி இருப்பது புதுமை!
ஹீரோ உதயா காமநெடியை நம்பும் ஹீரோக்களுக்கு மத்தியில், காமெடியை நம்பி படமெடுத்து, நடித்து அதில் ஜெயித்தும் இருக்கிறார். அப்பாவிற்கு அடங்கிய பிள்ளையாக, அப்பாவிற்கு பிடித்த திருக்குறள்களை பாடியபடி பக்கவாக நடித்து ஜெயித்திருக்கிறார் மனிதர்! திருக்குறள் மீது பற்று கொண்ட பிராமண பெண்ணாக ஹீரோயின் ஸ்வேதாபாசு, பொண்வண்ணன், தாதா ஆதித்யா, காமெடி நண்பன் சத்யன் என சகலரும் படத்தில் சக்கபோடு போட்டிருக்கின்றனர்.
“அன்பும் அறனும்…” எனத் தொடங்கி தொடரும் திருக்குறள் பாடலில் தொடங்கி, சகல பாடல்களிலும் சபாஷ் வாங்கிவிடுகிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆர்.சரவணனின் ஒளிப்பதிவும் இனிமை! அறிமுக இயக்குநர் சாண்டில்யாவின் இயக்கத்தில் பின்பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, முன்பாதி படத்திலும் இருந்திருந்தது என்றால், “ரா ரா” சும்மா “ஜோர் ரா” என்று பேசப்பட்டிருக்கும்!






