Archive for the ‘Minsaram Movie Review’ Category

மின்சாரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திரையிலாவது தன் சி.எம். கனவை தீர்த்துக் கொள்ளலாம் எனும் முடிவில் முதலமைச்சராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் மின்சாரம்!

கதைப்படி அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு, ஊரையே உப்புக்கண்டம் போடும் ரவுடியையும், அவரது உடன்பிறப்பையும் விரும்பத்தகாத சூழ்நிலை ஒன்றால் எதிர்க்கத் துணிகிறார் கல்லூரி மாணவர் ஒருவர். அதனால் அவரது நண்பர்களும், குடும்பமும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. பழிக்குப் பழியாக அந்த தாதாவிற்கு உதவும் அதிகாரவர்க்கத்தை கடத்தி வைத்துக் கொண்டு சி.எம். திருமாவிற்கு போன் போடும் பாதிக்கப்பட்ட இளைஞனையும், அவன் பின்னால் நிற்கும் மாணவ சமுதாயத்தையும் எப்படி நல்வழிப்படுத்தி., நயவஞ்சகர்களுக்கு தண்டனை வாங்கித் தருகிறார் முதல்வர் திருமா என்பதுதான் மின்சாரம் படத்தின் மொத்தக் கதையும்!

புதுமுகங்கள் யுவராஜ், முத்துசாமி, மதுசந்தா, சவுகந்தி, பாலிசிங், என்னுயிர் தோழன் ரமா, சுஜிபாலா, கானா உலகநாதன், நாடோடிகள் நாகு, நெல்லை சிவா, கோவை செந்தில், நிவேதா, மகா என ஏகப்பட்ட அறிமுகங்களும், பழகிய முகங்களும் படம் முழுக்க பரவி வந்தாலும், முதல்வர் பாத்திரத்தில் வரும் தொல்.திருமாவளவனின் வசன உச்சரிப்பும், நடிப்பும், கானா உலகநாதனின் காசிமேட்டு குப்பத்தையே… பாடலும், நடனமும்தான் மின்சாரம் படத்தின் ‌பெரிய பலம்! மற்றவை எல்லாம் ஷாக் அடிக்கும் பலவீனம்!

கே.வி.சுரேஷின் ஒளிப்பதிவு, டி.தேவனின் இசை என எல்லாம் இருந்தும் என்.செல்வகுமாரனின் எழுத்து, இயக்கத்தில் மின்சாரம் ஷாக் அடிக்கவும் இல்லை கடிக்கவும் இல்லை!