கோட்டி
Posted in Kotti Movie Review, latest tamil movie, tamil film review on 01/15/2011 03:17 pm by admin
வழக்கமான தாதாயிஸ கதைதான் “கோட்டி”, அதை வழக்கத்திற்கு மாறாக சொல்ல நினைத்திருக்கிறார் படத்தின் நாயகரும் இயக்குநருமான சிவன்!
சாய்குமார் அந்த ஊரிலேயே பெரிய தாதா. அவருக்கு ஆப்போசிட் தாதா ஆர்யன். அதிலும் சாய்குமார் நல்லதாதா, ஆர்யன் கெட்ட தாதா. அப்புறம்? அப்புறமென்ன…? தன் மகனுக்காக மனைவி யுவராணி கேட்டு கொண்டதால் சாய்குமார், தாதாயிஸத்தை கைவிட, அந்தநேரம் பார்த்து ஆர்யன் யுவராணியை தீர்த்து கட்டுகிறார். வெகுண்டெழும் சாய்குமார் தன் மகனை அதே ஊரில் தன் மகன் என்று தெரியாத அளவுக்கு வேறு ஒருவரிடம் கொடுத்து வளர்க்க சொல்லிவிட்டு மீண்டும் தாதாவாக களத்தில் குதிக்கிறார்.
ஒருபக்கம் ஆர்யனுக்கும், சாய்குமாருக்குமான விரோதம் வளர, மற்றொருபக்கம் சாய்குமாரின் செல்லமகன் தான் என்பது தெரியாமல் சிவனை வளர்க்கிறார். அவர்தான் ஹீரோ கோட்டி! அவருக்கு ஆர்யனின் அடியாள் கராத்தேராஜனின் தங்கை
பாக்கியாஞ்சலி மீது இந்த விவரம் எதுவும் புரியாமலே காதல்! அவர்களின் காதல் கைகூடியதா…? அப்பாவும், மகனும் ஒன்று சேர்ந்தார்களா…? அப்பா சாய்க்கு பிள்ளை சிவன் தப்பாமல் பிறந்து தாதாயிஸத்தில் குதித்தாரா…? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடை அளிக்கிறது கோட்டி படத்தின் மீதிக் கதை…!
கோட்டி-சிவன், ப்ரியா-பாக்கியாஞ்சலி, சாய்குமார், யுவராணி, ஷர்மி ஆர்யன் கராத்தேராஜன், நந்தா சரவணன், சாம்ஸ், பாலாசிங், சுவாமிநாதன் என எக்கச்சக்கமான நட்சத்திரங்கள். புதிய-பழைய முக பாடின்றி பளீச் என நடித்திருக்கின்றனர். ஆனாலும், ஆக்ஷன் படங்களுக்கே உரிய லாஜிக் மிஸ்டேக்குகள், படம் முழுக்க பரவி கிடப்பதால், ஆர்.ஹச்.அசோக்கின் அருமையான ஒளிப்பதிவும், குருகல்யாணின் இதமான இசையும் கூட எடுபடாமல் போகிறது. அதனால் கோட்டி ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டும் சுவையான போட்டி!











