Archive for the ‘Kasethan Kaduvalada Movie Review’ Category

காசேதான் கடவுளடா

நான்கு ஜேப்படி, வழிப்பறி, பிக்பாக்கெட் திருடர்கள், அவர்கள் வசிக்கும் காலனியை, அந்த இடத்தின் உரிமையாளர் காலி செய்ய வலியுறுத்துகிறார். ஏரியாவாசிகளுடன் அதற்கு நோ செல்லும் இந்த நால்வரும், அந்த காலனியை காப்பாற்றி கைப்பற்றி ஏரியாவாசிகளுக்கே சொந்தமாக்க முடிவு செய்கின்றனர். அதற்கு நான்கு கோடி ரூபாய் தேவை எனும் நிலையில், ஜேப்படி, வழிப்பறியை நிறுத்திவிட்டு, பெரிய அளவில் ஒரு வங்‌கியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். திட்டமிட்டபடி ஒரு வங்கியில் கொள்ளை அடித்து ரூ.4 கோடி பணத்தை ஒரு இடத்தில் புதைக்கின்றனர். அப்படி புதைத்த பணம் திரும்ப கிடைப்பதில் தான் சிக்கல்! அந்த சிக்கலை முறியடித்து காலனியை கைப்பற்றினார்களா…? இல்லையா…? என்பது க்ளைமாக்ஸ்! இது தான் “காசேதான் கடவுளடா” படத்தின் மொத்த கதை, களம், கரு எல்லாம்!

இந்த கதையை ரசிகர்களின் காதில் எவ்வளவு பூ சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்றி வளைத்து, காமெடியை மட்டுமே கருத்தில் கொண்டு படமாக்கி இருக்கிறார் இயக்குநர் திருமலை. கருணாஸின் இசை, சேவிலோராஜாவின் ஒளிப்பதிவு, புதியவர் ஷரனின் நடிப்பு, காம்னா ஜெத்மாலனி, கருணாஸ்,

பாண்டியராஜன், திவ்யா, சத்யன், டெல்லி கணேஷ், சிங்கமுத்து, சிங்கம் புலி, மயில்சாமி, பாண்டு, மீரா கிருஷ்ணன், பாபிலோனா என எல்லோரும் நடித்திருக்கிறார்கள். எல்லாமும் இருக்கிறது… ஆனால் பின் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முன்பாதியில் இல்லாதது பலவீனம்.கருணாஸின் இசையும், காமெடியுமே பலம்!

மொத்தத்தில் “காசேதான் கடவுளடா”, “‌காமெடி படமடா!” “கடிபப்படமடா!!”