ஐவர்
Posted in Ivar Movie Review, latest tamil movie, tamil film review on 04/13/2011 01:23 pm by admin
நால்வரோடு ஐவரானோம்… என இதிகாச இராமாயணத்தில் ராமன் தனக்கு உதவி செய்த நல்லவர்களை எல்லாம் தன் சகோதரர்களாக பாவித்து பேசிய டயலாக்கையே டைட்டிலாக்கி வெளிவந்திருக்கும் படம்தான் “ஐவர்”. ஆனால் அதுபோன்று புராணங்களையே நவீனமாக படைத்து பார்த்து வரும் கலையுலகில் இதிகாச காலத்து கதையோடும்,
களத்தோடும் வந்திருக்கிறது “ஐவர்” என்பது தான் பலவீனம்!
நல்ல நட்பிற்காகவும், அவனது குடும்பத்திற்காகவும் துரோகி பட்டத்தையும் சுமந்து ஒதுங்கி வாழும் ஒருத்தரை அவனது உயிர் நண்பனுடன் இணைக்க போராடும் நான்கு இளைஞர்களின் கதைதான் “ஐவர்”. இந்த நால்வரில் ஒருவரின் காதலி அந்த நல் நண்பர்கள் இருவரில் ஒருவரின் தங்கை என்பது சுவாரஸ்யம்! மற்றபடி சீரியஸ் சீன்களிலும் ஹாஸ்யம் நிரம்பி வழிவதுதான் அதிசயம்!
விஜி, ஜிங்கா, சூர்யா, சுந்தரம் என ஏகப்பட்ட பாத்திரங்கள் விஜய் ஆன்ந்த், இலா, பேரரசன், ஹூசைன், அதுல்யா, ஸ்ரீமன், ஹரீஸ், ஜெயஸ்ரீ, பாவா லஷ்மணன் சுப்புராஜ், இந்து லேகா என ஏகப்பட்ட புது மற்றும் பழைய நடிகர் நடிகைகள் இருந்து பிரியனின் இயக்கம் பெரிதாகவும், புதிதாகவும் இல்லாததால் “ஐவர்” ரசிகர்களை எந்த அளவு கவருவார் என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் “ஐவர்”! “பலே பழையவர் அல்ல… பல பழையவர்!”






