அய்யன்
Posted in Ayyan Movie Review, latest tamil movie, tamil film review on 03/24/2011 10:53 am by adminவடிவேலுவுடன் நிறைய சினிமாவிலும், நிஜத்திலும் சண்டை போட்ட நடிகர் சிங்கமுத்துவின் வாரிசு வாசன் கார்த்திக் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம்!
உல்லாச பேர்வழியான ஹீரோவை, வீரன் சேகுவேராவின் வீர வரலாற்றை படிக்க சொல்லி போராளியாக்கும் ஹீரோயின். அந்த போராட்டத்தாலேயே உயிரை விடுவதும், அவர் உயிர்விட காரணமான வில்லன்களை தீர்த்துக் கட்ட ஹீரோ
விஸ்வரூபம் எடுப்பதும்தான் அய்யன் படத்தின் கதை, களம், இத்யாதி, இத்யாதி எல்லாம்!
ஊதாரி, போராளி என இருவேறு முகபாவங்களிலும் முனியசாமி பாத்திரத்தில் கிராமத்து இளைஞராக வாசன் பொருந்தி நடித்திருக்கிறார். ஹீரோயின் அரிய செல்வியாக புதுமுகம் திவ்ய பத்மினி வாழ்ந்திருக்கிறார். இவர்களுடன் சண்முகராஜன், பிதாமகன் மகாதேவன், சேரன்ராஜ், சிங்கமுத்து, கஞ்சாகருப்பு, பரணி, ஆதி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அதிலும் கஞ்சா கருப்பு, சிங்கமுத்து இருவரது காமெடியும் கலக்கல் சரவெடி! அதிலும் பொய்வண்டியாக சிங்கமுத்து பண்ணும் அலப்பறை பிரமாதம்!
ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமியின் எழுத்து, இயக்கத்தில் காசியாப்பிள்ளையின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் அய்யனை நல்ல பையன் ஆக்கியுள்ளது!
அய்யன் : பொய்யன் அல்ல மெய்யன்!









