அவர்களும் இவர்களும்
Posted in Avargalum Ivargalum Movie Review, latest tamil movie, tamil film review on 03/24/2011 11:06 am by admin
பெரிய இடத்துப் பெண்ணும், தாழ்ந்த ஜாதி பையனும் காதலித்து ஓடிப்போனால் ஏற்படும் விளைவுகளை அவர்களது பக்கத்தில் இருந்தும், அவர்களை சார்ந்தவர்களது பக்கத்தில் இருந்தும் அணுகியிருக்கும் படம்தான் அவர்களும் இவர்களும்!
ஜாதி, அந்தஸ்து, வசதி, வாய்ப்புகள் பற்றி கவலைப்படாது காதல் கொள்கிறது விமல்நடராஜன் – சுப்ரஜா ஜோடி. ஒரு கட்டத்தில் ஊரும், உறவும் துரத்த., திருட்டு ரயிலேறும் அந்த ஜோடிக்கு, அவர்களை மாதிரியே ஊரை விட்டு ஓடி வரும் அழகி சதி்ஷ், மானாட மயிலாட புகழ் ஐஸ்வர்யா ஜோடி அடைக்கலம் தருகிறது. ஒருகட்டத்தில் இவர்கள் இருக்கும் இடத்தை
கண்டுபிடித்து விடும் சுப்ரஜாவின் அண்ணன் அண்ட் கோவினர், மீண்டும் தரத்துகின்றனர். அவர்களது துரத்தலால் அந்த நால்வரும் போகும் வாகனம் விபத்தில் சிக்கி, இரண்டு ஜோடிகளில் ஒரு ஜோடியின் ஆணும், மற்றொரு ஜோடியின் பெண்ணும் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர்.அப்புறம்? அப்புறமென்ன….? என்பதுதான் அவர்களும் இவர்களும் படத்தின் மீதிக்கதை! நெகிழ்ச்சியான இந்த கதை காதலை பிடிக்காதவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும் விதமாக படமாக்கப்பட்டிருப்பதுதான் படத்தின் பெரும் பலம்!
விமல் நடராஜன் – சுப்ரஜா, சதீஷ்- ஐஸ்வர்யா இந்த ஜோடி போன்றே அப்பா கேரக்டர்களில் வரும் மாணிக்க விநாயகம், ஜி.எம்.குமார், சமையல் காண்ட்ராக்டர் சார்லி, டாக்டர் பாத்திரத்தில் வரும் அகத்தியன், அண்ணனாக வந்து அலப்பறை பண்ணும் இப்படத்தின் தயாரிப்பாளர் கேப்டன் சி.காமராஜ் உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்.
ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் இசையும், அகர் செங்குட்டுவனின் ஒளிப்பதிவும் படத்தின் பெரும் பலம்! பின்னணி இசையும், பழைய (1980 – 90) பாணி இயக்கமும் பலவீனம்!
மற்றபடி ரயிலிலேயே தொடங்கி, ரயிலிலேயே முடியும் அவர்களும் இவர்களும் படத்திற்கும் ஒரு ரயில் விபத்தே திருப்புமுனையாக அமைந்திருப்பதும், இயக்குனர் வீரபாண்டியனின் அனுபவ அறிவை பறைசாற்றுகின்றன.
மொத்தத்தில் விரசம், சரசம் கலக்காத அவர்களும் இவர்களும் நிச்சயம் இளம் ரசிகர்களின் நெஞ்சத்தை உரசும்!






