காதலன் காதலி
Posted in Kadhal Kadhali Movie Review, latest tamil movie, tamil film review on 12/04/2011 05:02 pm by admin
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்க போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் ஜெய் ஆகாஷ், நடத்தியிருக்கும் காதல் போராட்டம் தான் “காதலன் காதலி”.
கதைப்படி திருப்பதி என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஜெய் ஆகாஷ். அவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நிதி சுப்பையாவிற்குமிடையே உயிருக்கு உயிரான காதல்! நிதி சுப்பையாவின் ஒரு சில நடவடிக்கைகளைப் பார்த்து அம்மணிக்கும், அவரது முதலாளிக்குமிடையில் கள்ளத்தொடர்பு என சந்தேகிக்கும் ஜெய், அதை நேரடியாக கேட்க, நிதிக்கும்-ஜெய்க்குமிடையேயான காதல் மோதலில் முடிகிறது. அதன் விளைவு தன் படிப்பை நண்பர்கள் உதவியுடன் சென்னை வந்து தொடரும் ஜெய்க்கு காதல், கத்திரிக்காய் என்றாலே பாகற்காயாய் கசக்கிறது. கல்லூரியில் யாராவது யாரையாவது காதலித்தார் என்று தெரிந்தால் அவர்களை அடித்து பிரிக்கும் ஜெய், மீது டெய்சி போபனாவிற்கு
காதல் வருகிறது. அந்த காதல் கைகூடியதா, இல்லையா…? நிதி சுப்பையா மெய்யாலுமே ஜெய்யுடனான காதலில் துரோகம் செய்தாரா..? இல்லையா…? என்பது காதலன் காதலி படத்தின் யூகிக்க முடியாத மீதிக்கதை!
கல்லூரி மாணவர், ப்ளஸ் குத்துச்சண்டை வீரர் என ஹெவிரோலில் நடித்தும், இயக்கியும் இருக்கும் ஜெய் ஆகாஷூக்கு இப்படத்தில் அவரது இயக்கத்தைவிட நடிப்பு பெட்டர். இவை இரண்டையும்விட நிதி சுப்பையா, டெய்சி போபனா இருவருடனும் கனவிலும், நிஜத்திலும் அடிக்கடி போடும் டூயட்கள் பெட்டர்! டெய்சி, நிதி இருவரும் கிளாமரே கதி என ஒரேயடியாக கவர்ச்சியை நம்பி இருப்பதால் நடிப்பு மிஸ்ஸிங். சுஹானி, ராகுல்தேவ், சுகுமார் என நிறைய பேர் படத்தில் இருக்கிறார்கள். நந்தன்ராஜின் இசை,
ஜாக்கிஜானின் ஒளிப்பதிவு எல்லாம் இருக்கிறது.
தன்னை சந்தேகித்து விலகும் காதலுனுக்கு, தன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என புரிய வைத்து, இறந்து தன் இருதயத்தையும் பரிசாக தரும் காதலி எனும் புதிய “தாட்”டை “நச்” சென்று படமாக்கியிருந்தால், ஜெய் ஆகாஷ், ஜெயித்திருப்பார்! ஜொலித்திருப்பார்! “காதலன் காதலி” ஜெய் ஆகாஷூக்கு “தோல்வி தராத தோழி!”






